காலம் எந்தன் கை விலங்காய்
மாறிய பொழுதில்
தேவதையென நேரில்
வந்தாய்!!
காற்றுக் கூடத் தீண்ட மறுத்த
காலமும் உண்டு
தென்றலென வருடிச்
சென்றாய்!!
துணையின்றி தவித்தேன்
தனியாய் நான்!
நிழலாக எனையே
தொடர்ந்தாய் நீ!
உயிரற்ற சவமாய்
இருந்தேன் நான்!
உயிராக எனக்குள்
கலந்தாய் நீ!
நான் விழுந்தாலும்
நான் எழுந்தாலும்
என்றும் எந்தன் தோள் சேரும் தோழி!
ஆறாத காயங்கள்
ஆயிரம் இருந்தும்
ஆரமுதாய் நீயே
வந்தாய்!
அகமெல்லாம் அனலாக
தகித்த பொழுதில்
குளிர் நீராய்
குளிர்வித்தாய்!
ஏழேழு ஜென்மம்
தொடர்ந்தாலும்
அழியாத உறவு
நம் சொந்தம்!
இருக்கின்ற உயிரோ
ஒன்றே தான்!
அதையும் நீ கேட்டால்
தருவேன் நான்!
நான் விழுந்தாலும்
நான் எழுந்தாலும்
என்றும் எந்தன் தோள் சேரும் தோழி!
awesome da :)
ReplyDeletethanks divi
ReplyDelete