நான் ஏன் தமிழில் பேச வேண்டும்?
இன்றைய காலத்தில் தமிழகத்தில் நாகரிகம் என்பது மேற்க்கில் பழகி புளித்து போனதை பின்பற்றுவதே. நுனி நாக்கு ஆங்கிலமும் கடித்துக் கொதறப்படும் தமிழும் அதன் சில பகுதிகளே. நான் சில சமயம் பேசும் சுத்த தமிழ் சிலருக்கு வேடிக்கை.ஆங்கிலம் என்பது நாம் உலகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களை தொடர்பு கொள்ள ஒரு அடித்தளம்.மற்றபடி இரு தமிழர்கள் சந்திக்கும் போது முடிந்த வரை தமிழிலேயே பேச வேண்டும்.இதில் எவ்வித தயக்கமும் இருத்தல் கூடாது.
நியாயப்படி நாம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படி கற்க வேண்டும்.நடைமுறை சாத்தியம் இதற்கு குறைவு தான். ஆனால் என்னுடைய அதிக பட்ச ஆசை அனைவரும் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய பொருட்களுக்கு மட்டுமாவது நாம் உரிய தமிழ் சொற்களை கற்க வேண்டும்.
ஒரு உதாரணதிற்கு இப்படி வைத்துக் கொள்வோம்...ஒரு அயல் நாட்டவர் நம்மை சந்திக்கும் போது ஏதேனும் ஒரு பொருளை சுட்டி காட்டி அதன் தமிழாக்கத்தை கேட்டு நாம் அதன் அர்த்தம் தெரியாமல் அசடு வழிவது எவ்வளவு கேவலமாக இருக்கும்.
ஒன்றை இங்கே தெளிவுப் படுத்த விரும்புகிறேன்.. நான் இதை சொல்வதன் நோக்கம் நாமே நமது தாய்மொழியை புறக்கணித்தால் வேறு யார் அதை பேணி பாதுகாப்பார்? நாம் நமது செம்மொழியை வளர்க்க தேவை இல்லை.இருப்பதை கெடுக்காமல் பேசி பகிர்ந்து கொண்டாலே போதும். இதற்காக நாம் அன்றாட வாழ்வில் அனைவற்றையும் தமிழாக்கம் செய்தால் நம்மை விட வேடிக்கை பொருள் யாரும் இல்லை.
கற்பனை பண்ணி பாருங்களேன்.. "நான் என் கைபேசியை வீட்டிலேயே வைத்து விட்டேன்." என்று பேசுவதற்கும் நாம் இப்போது பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது. பல அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆங்கிலத்திலேயே பெயரிட படுகின்றன. அவற்றிற்கு நாம் தமிழ் சொற்களை கண்டுபிடித்தாலும் அதனை ஆங்கிலத்திலேயே விளிப்பது தான் நியாயம். மாறாக தமிழ் மாந்தர் தங்களது படைப்புகளுக்கு தமிழில் பெயரிடலாம்.
பல மொழிகள் கற்கலாம் பேசலாம்.ஆனால் தாய்மொழியை மறத்தல் நியாயம் இல்லை.நமது மொழியும் பெருமையை நாமே உணராது இருப்பது தகுமோ?நண்பர்கள் சந்திக்கும் போது ஒரு சிறிய பயிற்சி செய்து பாருங்கள்.. நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொற்களை நீங்களே முயன்று கண்டுபிடியுங்கள். பழைய தமிழ் பாடல்களை கேட்டு அதன் அர்த்தங்களை கண்டுபிடிக்க முயலுங்கள்.
தாய்மொழியை நேசியுங்கள்!! தமிழ்மொழியை சுவாசியுங்கள்!!
hey nice da soooper huh iruku :))
ReplyDeletethanks divi
ReplyDeleteஇதே போல் அனைவரும் எண்ண வேண்டும்.
ReplyDeleteஎண்ணங்கள் விரைவில் ஈடேறும்..!!!
ReplyDelete